நூல் விமர்சனம்
"தூறலின் கடைசித்துளி"-கவிதை நூல்-நூலாசிரியர்:சந்திராமனோகரன்,இருவாட்சி பதிப்பகம்,41,கல்யாணசுந்தரம் தெரு,சென்னை.விலை:ரூ.60/-
காதலைக் கொண்டாடும் அகம் சார்ந்த கவிதைத் தொகுப்பாக மிளிர்கிறது "தூறலில் கடைசித் துளி" தொகுப்பு.
"நனைந்து நனையாத உன் நினைவுத் துளிகள்" "எல்லா நதிகளிலும் உன் முகம்" "என் கண்ணீரில் எரியும் உன் தீ விழிகள்" என் பல்வேறு கவிதைகளின் தலைப்பே கவித்துவமாய் படிக்கும் வாசகர்களைப் பரவசப்படுத்துகிறது.
"கோப்பை வழிகிறது" என்ற கவிதையில்
"என் வரிகளையெல்லாம்
கவிதை என்கிறாய்
உன் முகத்தின் வியர்வையை
விடவா அவை..?"
என்ற கேள்வியின் மூலம் கவிஞரின் அழகுணர்வை நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.
"மிஞ்சியவை" என்ற கவிதையில்
"ஒவ்வொரு இரவும்
மிஞ்சிப் போய் விடுகிறது
பழைய சோற்றைப் போலவே
உன்னைப் பற்றிய கனவுகளும்"
என்ற கவிதை வாழ்க்கையின் யதார்த்தத்தை உவமையாக்கி கட்டமைக்கப்பட்டுள்ளது.
"தூறலின் கடைசித்துளி"- ஒவ்வொரு துளியும் காதல் உணர்வுகளில் வடிவமைக்கப்பட்ட கவித்துளி.இந்நூல் நிச்சியம் இலக்கிய தாகத்தைத் தீர்க்கும்.இது கடைசித்தூறலாக இல்லாமல் பல கவித்துளிகளைத் தர வேண்டுகிறோம்.
ஆக்கம் : நீலநிலா செண்பகராஜன்.
(நீலநிலா செப்டம்பர் 2010 & டிசம்பர் 2010 இதழில் வெளியானது).
No comments:
Post a Comment