நட்பூக்கள்-7
சீரிதழ்களின் மீதான ஆர்வமென்பது அலாதியான
சுகம்.எங்கு கிடைத்தாலும் தவறவிடக் கூடாது என்றே கருதினாலும்,முற்றிலுமாக அனுபவிப்பதென்பது சாத்தியமற்ற ஒன்றாகவே இருந்து வருகின்றது எனக்கு.அப்படியான தேடலில் நீலநிலா என்னும் காலாண்டிதழின் நிறுவனராக அறிமுகமானவர் நண்பர் செண்பகராஜன்.
ஒரு குடுவைக்குள் இத்தனை லிட்டர் திரவம் நிரப்பலாம் என்பது தொடங்கி,ஒவ்வொன்றுக்கும் கொள்ளளவு உண்டு.ஆனால் மனிதத்திறமையின் கொள்ளளவு என்பதற்கு வரையறையே இல்லை சிலரைப் பார்க்கும் போது.
அந்த விதத்தில் இவருக்குமள் இருக்கும் திறமைக்கும் வரையறை இல்லை! அதிகாரியாகப் பணி,நீலநிலா இதழின் நிறுவனர்,முதன்மை ஆசிரியராக சீரிதழ் பணி,பாடகர்,பேச்சாளர்,கவிஞர்,பட்டிமன்ற நடுவர்,சமூக சேவகர் என இவரைப் பற்றி பட்டியலிட்டால் அது நீண்...........டு கொண்டே போகும்.
1992-ல் த.மு.எ.ச.வின் சாத்தூர் கிளை நடத்திய கவிதைப்போட்டியில் முதல் பரிசு,97-ல் மதுரை காமராசர் பல்கலைக்கழக அளவிலான இளைஞர் கலை விழாவில் இவர் எழுதிய நாடகத்துக்கு முதல் பரிசு,2005-ல் எழுத்தாளர் ஜெயகாந்தனால் வழங்கப்பட்ட இந்தியக் கலாச்சார நட்புறவுக் கழகத்தின் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் விருது,2007-ல் கலை இலக்கிய பெருமன்றம் வழங்கிய சிறந்த எழ்த்தாளர் என்ற ஆங்கீகாரம்,2009-ல் இவரது "யாரோ எழுதிய கடிதம்" கவிதை நூலுக்கு சென்னை பெரியார் காமராஜ் பேரவை அளித்த மனித நேய முரசு பட்டம்,தாய்மண் இலக்கியக் கழகம் வழங்கிய புரட்சிப் பகலவன் விருது,2010-ல் சென்னை மகாகவி நற்பணி மன்றம் வழங்கிய பல்கலைச் செல்வர் விருது,ஜெயா டி.வி.யில் காதல் விவாத மேடை நிகழ்ச்சியில் பங்கேற்பு,தினகரன் நாளேட்டின் 'நகரும்,நடப்பும்' தலைப்பிலான நேர்காணல்,பல்வேறு இலக்கிய அமைப்புகளின் முக்கிய பொறுப்பு என இவரின் கலையுலகப் பயணத்தின் சுவடுகள் ஒவ்வொன்றும் குறிப்பிடத்தக்கவை.
இத்தனை அங்கீகாரங்களுக்கும் உரியவரின் வயது குறைந்தது 60க்கும் மேலிருக்கும் என்று அபிப்ராயம் வந்திருப்பின் மாற்றிக்கொள்ளுங்கள்.இவரது வயது 34 தான்!இவரின் லட்சியங்கள்.....நீலநிலாவினை முன்னணி இதழாகக்கொண்டு வரவேண்டும்,வித்தியாசமான சிறந்த திரைப்படம் இயக்க வேண்டும் என்பதே. லட்சியங்கள் நிறைவேற வாழ்த்தலாமே!
ஆக்கம்: எழுத்தாளர் வேளச்சேரி .சு.கணேஷ்குமார்,கவிஓவியா இதழ் செப்டம்பர் 2010.
vaazhthukkal thoozhaa! thodarungkal udan varukiren.
ReplyDelete