Friday, November 26, 2010

குறுஞ்செய்தி இதழ் கவிதைகள்

கரையில் ஒதுங்கியிருந்த,
சிப்பிக்களை சேகரிக்கத் தொடங்குகிறேன்,
அலையின் சீற்றமூம்,காற்றின் அழுத்தமும் அதிகரிக்கிறது,
வீசி எரியப்படுக்கிறேன்,
கை நழுவிய பையிலிருந்து
சிதறி இருந்தன சிப்பிகள்...
-அய்யாவாடி சத்யாவின் "கிறுக்கல்" இதழ்-26.11.2010.


சிறு அறையில்
தொங்கி கொண்டிருக்கிறது
காலம்..
- ஆக்கம் : முத்துசிவகுமாரன்,யாழியின் "யாழியிசை" இதழ்-26.11.2010. 

கொஞ்சம் மணல்,
கொஞ்சம் கூழாங்கற்கள்,
கொஞ்சம் கிளிஞ்சல்கள்,
சிறு மீன்கள் என திகழ்கிறது,
என் வரவேற்பறையில் இருப்பது
லிட்டர்  கொள்ளவில் ஒரு கடல்,
அடுக்குமாடி குடியிருப்பில் 
என் வீடு முதல் தளத்தில் என்பதால்,
கடல் மட்டத்திலிருந்து 
பூமியின் உயரம் சுமார் 4.88 மீட்டர்.
- ஆக்கம்: ப.தியாகு, "யாழிசை" இதழ்  01.12.2010.


உங்கள் வலது கை உணவு அருந்தும்,
ஆசிர்வதிக்கும்,
கவி எழுதும்,
கை குழுக்கும்,
வணங்கும்,வரவேர்க்கும்...
ஆனால் மலமும் அள்ளும்
எங்கள் வலது கை!
-ஆக்கம்:கண்மணி ராசா," ஜெயம் "இதழ்  322  02.12.2010. 

லாரி ஏறி
செத்தது
நதி!
- ஆக்கம்:கந்தகப்பூக்கள் சிரிபதி, "களம்" இதழ் 106 08.12.2010.                                                                                                                                                                                                                               

நான் எழுதிய பெண் சிசுக் கொலை விழிப்புணர்வு வாசகங்கள்

"பெண் சிசுவைக் காப்போம்!
 பெண் சமூகத்தை சீரமைப்போம்!"

"பெண் சிசுவைக் கொல்லாதே..!
  பெண்கள் சமூகத்தை குழியில் தள்ளாதே..!"

"பெண்கள் நாட்டின் கண்கள்..!
 பெண் சிசுக்கொலையோ புரையோடிப் போன புண்கள்..!"

"பெண் சிசுக்கொலை இல்லாத சமூகம்..!
 பெண்களின் சாதனையில் மலரும் புத்துலகம்..!"


"ஆணுக்கு பெண் சமம்..!
  ஆகையால்பெண் சிசுவைக் கொல்வது அதர்மம்..!"

"பெண் சிசுக்கொலை இல்லாத சமூகத்தைப் படைப்போம்..!
  பெண்மையைக் கொண்டாடி நாளும் போற்றுவோம்..!"
-தாழம்பூ இதழ்- 313,ஜுலை 2009

Thursday, November 25, 2010

சீனாவில் "நீல நிலாவிற்கு" கிடைத்த அங்கீகாரம்

அழைப்பிதழ்

குறுஞ்செய்தி இதழில் வெளியான என்னுடைய குறுங்கதை

"மாறுவேடப்போட்டியில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது"


"எப்படிடா...?"


"வாழ்க்கையில் தான் தினமும் நடிக்கிறோம்,பிறகு எதற்கு மாறுவேடம்..!",என்றேன்,இந்த விளக்கம் சிறப்பாக இருந்தாக சொல்லி, முதல் பரிசு எனக்கு தந்தாங்க..! பதிலில் வியப்பில் ஆழ்ந்தான் நண்பன்.


-லிங்கம் இதழ்

Wednesday, November 24, 2010

குறுஞ்செய்தி இதழ்களில் வெளியான என்னுடைய கவிதைகள்




கல்லாய் நீ..!
உளியாக நான்..!
எப்போது காதல் சிற்பமாவோம் நாம்..?
 -குறுங்கவிதை இதழ்,14.06.2009.

உலகமே போற்றும்
சிறந்த கவிதை
குழந்தையின் கிறுக்கல்.
-லிங்கம் இதழ்,14.06.2009.


கண்களை என்னிடம் செலவழித்து விட்டு
இதயத்தை
எதற்காக சேமிக்கிறாய்..?
-பரவசம் இதழ்,14.06.2009.

வண்ண வண்ண நிறங்களில்
கட்சிக்கொடிகள்
வறுமையில் மக்கள்.
-கே.கே.ஆர்.இதழ்,14.06.2009.


தொலைந்து போனது
உறவுகளின் அன்பு பரிமாற்றங்கள்
திருமண மண்டப வாசலில் சிரித்தபடி
கை கூப்பி வரவேர்க்கும்
பொம்மைகள்.
-ராகா இதழ்,14.06.2009.

வாசலில் பிச்சைக்காரனின் குரல்!
மொட்டைமாடியில் காகத்தின் சத்தம்!
பசியுடன் வீட்டிற்குள் நான்..!
-உதயம் இதழ்,20.06.2009.


விதவை வேடமிட்டே
சம்பாதிக்கிறாள்
சுமங்கலி நடிகை.
-உதயம் இதழ்,02.07.2009.


பசியில் அழும் குழந்தை!
ஆச்சிரிய்த்தின் விளிம்பில் தாய்!
பால் குடிக்கும் பிள்ளையார்!
-உதயம் இதழ்,20.07.2009.

மணல் வீடு கட்டி மகிழும் வயது!
மண்ணைச் சுமந்து வாழ்கிறது
சின்னக்குழ்ந்தை!
-உதயம் இதழ்,07.08.2009.


சீதைகளாக ஈழத்தமிழர்கள்
எந்த இராமன் வந்து 
முள்வேளி உடைப்பானோ..?
-இனியா இதழ் 292.


கழிவறை இல்லாத கிராமங்களில்
வீடு தோறும்
தொல்லைக்காட்சிப் பெட்டிகள்.
-பரவசம் இதழ்,12.09.2009.

இராக்கட் உருவானது!
ஏவுவதற்கு தயாரானார்கள்
நல்ல நேரத்தை எதிர்ப்பார்த்து! 
-உதய்ம் இதழ்,16.09.2009.


வறுமை நரகாசுரனை ஒழித்து
என்றைக்கு கொண்டாடுவது இன்ப தீபாவளி?
சிவகாசி சிறுவனின் கேள்வி!
-சுபா வார இதழ்,11.10.2009.

நெற்றி என்னும் புத்தகத்தின்
அழகிய தலைப்பு
குங்குமம்.
-பரவசம் இதழ் 205,சம்பூர்ணம் இதழ் 14.06.2010.


"கேளுங்கள் தரப்படும்" என்றார்கள்
நிறைய பிரச்சனைகள்
எதைக் கேட்பது..?
-லிங்கம் இதழ்,14.10.2009.


அதிக மனிதர்கள்
கடைப்பிடிக்கும் மதம்
தாமதம்.
-எண்ணத்தின் வண்ணம் இதழ் 342.


எழுத்துக்களை பிரசவிக்கும்
கர்ப்பிணிப் பெண்
எழுதுகோல்.
-உதயம்,26.11.2009.

இசை புரியாவிட்டாலும்
ரசிப்பாதாய் நடிக்கிறோம்!
இசையாய் வாழ்க்கை அமைந்தாலும்!
-சுந்தர் இதழ் 155.


தீக்குளித்தான் முத்துக்குமரன்
எரிந்தது
தமிழர் நெஞ்சங்கள்!
-காகம் இதழ்.


சிறைச்சாலையில் உறங்குகிறார்
ஆயுதம் தாங்கியபடி
சிறைக்காவலர்!
-உதயம் இதழ்,05.04.2010.


வெயிலில் செறுப்பின்றி நடக்கும்
ஏழைச்சிறுவன்
சுடும் என் மணம்!
-இனியா 934.


பேருந்தில் கவிதை நூலை
படிக்க மனமில்லை
ஜன்னலுக்கு வெளியே ரசிக்கும் கவிதையாய்
மழை பெய்யும் போது!  
-ஜெயம் இதழ் 14.06.2010.




நீல நிலா இதழில் வெளியான கவிதைகள்

துளிப்பாக்கள்-நீல நிலா செப்டம்பர்-திசம்பர் 2009 இதழில் வெளியான கவிதைகள்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------


புரியாத பிரியம்
பிரியும் போது புரியும்.
---அ.ராமலட்சுமி.
கடக்கும் ரயில்
கையசைக்கும் சிறுவன்
சரக்கு வண்டி.
----பொன்.குமார்.
மறக்க முடியவில்லை
"மறந்து விடுங்கள்"
என அவள் சொன்ன்தை..!
---வீ.உதயக்குமரன்.
என் மூங்கில் தோப்பில்
நெருப்புத்துளி
நீ..!
---கா.அமீர்ஜான்.
கடல் அளவு நீரிருந்தும்
காய்ந்து கிடக்கிறது
கரை மணல்.
---ப.தமிழாளி.
கழுவி வைக்கப்பட்ட
குளம்பி கோப்பைகளில்
நிரம்பி வழிகிறது
நுளம்புகளின் ஏமாற்றம்.
---சி.கலைவாணி.
புறநகர் பகுதி
அரசியல்வாதி சொகுசு வீடு
வெட்டப்படும் தென்னந்தோப்பு.
---அருணச்சலசிவா.
உண்மை சொல்லவில்லை
உன்னைப் படியெடுத்த
புகைப்படங்கள்.
---பெ.விஜயராஜ்காந்தி.

தோண்டுவதன்று
தோன்றுவது
கவிதை! 
--செ.ஞானன்.

புராதன வீடு
கடனில் ஜப்தி
இடிக்கையில கண்டெடுக்கப்பட்டது
தங்கம்.
--க.இராமலிங்கம்,நன்றி-லிங்கம் இதழ்.

Friday, November 12, 2010

என்னைப் பற்றி சிறப்பு தகவல்கள்

1) சிறு வயதில் நாடகங்கள் எழுதி அரங்கேற்றியுள்ளேன்  
2) "எங் ஸ்டார்" நடனக்குழுவை நிருவகித்துள்ளேன்.
3) 1999 - ஆம் ஆண்டு நேர்காணல் "தினகரன்" நாளிதழில் வெளியானது.
4) 2000- ஆம் ஆண்டு "ஜெயா தொலைக்காட்சயில் "காதல் விவாத மேடை" நிகழ்ச்சியில் பங்கு  பெற்றேன்.
5)  2005-ஆம் ஆண்டு "இந்திய கலாச்சார நட்புறவு கழகம் - விருதுநகர் கிளை" நடத்திய  விருதுநகர்  மாவட்ட மாநாட்டில் "சிறந்த நிகழ்ச்சி  தொகுப்பாளர்" விருதை எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களால் பெற்றேன் . 
6)"2008 - ஆம் ஆண்டு "யாரோ எழுதிய கடிதம் " கவிதை நூலை எழுதி வெளியிட்டேன் . 
7) 2008 -ஆம் ஆண்டு "நீலநிலா பதிப்பகம்" மூலம்  "திரைப்பாடம் கற்போம்" நூலைப் பதிப்பித்தேன்.
8) 15 - பட்டிமன்றங்களி ல்  நடுவராக பங்கு பெற்றுள்ளேன்.
9) 2009 -ஆம் ஆண்டு நான் எழுதிய கவிதை நூலுக்கு "பெரியார் காமராசர்  பேரவை " "மனித நேய முரசு" வழங்கியது.             10)2009 -ஆம் ஆண்டு "நீலநிலா" இதழ் குழுமம் " மற்றும் "கந்தகப்பூக்கள் இலக்கிய  அமைப்பு" இணைந்து சிறுகதை,கவிதை நூல்  போட்டிகளை நடத்தியுள்ளோம்.
11) 2010 -ஆம் ஆண்டு "மகாகவி பாரதி நற்பணி மன்றம்" "பல்கலைச் செல்வர்" விருது வழங்கியது. 
12) இது வரை 22 இலக்கியக்  கூட்டங்களை நடத்தியுள்ளேன்.  

Wednesday, November 10, 2010

இதழைப் பற்றி

இதழ் நிறுவனர்-கவிஞர் நீலநிலா செண்பகராஜன்


இதழ் ஆசிரியர்-ஜெ.விஜயலட்சுமி

ஆசிரியர் குழு-கவிஞர்.பா.முருகேசன்,கவிஞர்,கந்தகப்பூக்கள்     ஷிரிபதி,ஓவியர்.ச.ச.கணேசன்.

சட்ட ஆலோசகர்-வழக்கறிஞர் சீனிவாசன்

செய்தி தொடர்பாளர்கள்-சி.கலைவாணி,தே.ரம்யா 

இதழ் விலை-ரூ.8/- ஆண்டு சந்தா- ரூ 40/- புரவலர் நன்கொடை- ரூ 500/-

இதுவரை வெளிவந்துள்ள இதழ்கள் 20
வெளியிட்டுள்ள சிறப்பிதழ்கள்: கவிதைச் சிறப்பிதழ், கிராமிய சிறப்பிதழ், இளமைச் சிறப்பிதழ்

முகவரி-23,க.யி.ச.கிட்டங்கி தெரு,விருதுநகர்-626001.