Monday, November 5, 2012

28 வது  புத்தகக்  கண்காட்சி

 நேஷனல் புக்  டிரஸ்ட்  ஆப்  இந்தியா , புதுதில்லி , நியூ  செஞ்சுரி  புக்  
ஹவு ஸ் ,சென்னை  மற்றும்  தமிழ்நாடு  கலை  இலக்கியப்  பெருமன்றம் , விருதுநகர்  கிளை  இணைந்து  28 வது  புத்தகக்  கண்காட்சியை  விருதுநகரில்  உள்ள  பூமாலை  வணிக  வளாகத்தில்  6-10-2012 அன்று  நடத்தியது.
இக்கண்காட்சியை  நீலநிலா செண்பகராஜன்  திறந்து  வைத்தார் .
 
நீலநிலாவிற்கு  கிடைத்த  விருது 

சமீபத்தில் (14-10-2012) சென்னை சைதாப்பேட்டை மகாத்மா  காந்தி நூலகம்   'சக்தி   கிருஷ்ணசாமி' விருதை  நீலநிலா  இதழ்  நிறுவனர்  நீலநிலா  
செண்பகராஜனுக்கு  பிரபல   வரலாற்று  எழுத்தாளர்   கௌதம  நீலாம்பரன் மூலம்  வழங்கியது . இவருடன்  விருது  பெற்ற மற்ற   
எழுத்தாளர்கள் கோவை  கோகுலன் ,என்.சி .மோகன்தாஸ் ,திருப்பூர் 
 கிருஷ் ணன், டாக்டர்  எம் .எஸ் .கோவிந்தராஜன் போன்றவர்கள் .

துளிப்பாக்கள் 

நிலவைத் தேடும் தெருவிளக்கு
மின்சாரம்  துண்டிக்கப்பட்ட
இரவு!

---------------------------------------------------------------------------------
உடல்  வாகனம்  மோதி
விபத்தில்  பலி
ஆணுறை கவசம் இல்லாமல்
விபச்சார  சாலையில்  உல்லாச  பயணம் .
------------------------------------------------------------------------------------
ஆக்கம் : நீல நிலா  செண்பக ராஜன் 

Friday, May 11, 2012

நினைவலைகள்

நினைவலைகள்


நீலநிலாவைத் தேடி வந்த மலேசியா எழுத்தாளர்

       நீலநிலா இதழ் நிறுவனர் கவிஞர் நீலநிலா செண்பகராஜனை காண்பதற்காக
 மலேசியாவிலிருந்து   எழுத்தாளரும்,கவிஞருமான டாக்டர்.துளசி அண்ணாமலை அவர்கள் 19-12-2011 அன்று விருதுநகர் வந்திருந்தார்.மலேசியாவில் சித்த மருத்துவராக பணிபுரியும் அவர் மலேசியாவிலிருந்து வெளிவரும் "தின முரசு" நாளிதழில் துனை ஆசிரியராக 1989-ஆம் ஆண்டு முதல் 1990-ஆம் ஆண்டு வரை பணிபுரிந்துள்ளார்."வாழ வேண்டும் வாச மலரே!" என்ற சிறுகதை நூலையும் வெளியிட்டுள்ளார். மலேசியா தமிழர்களின் வாழ்வியல் நிலை, மலேசியாவில் உள்ள தமிழ் எழுத்தாளர்களின் இலக்கிய முயற்சிகள், மலேசியா தமிழர்களின் திரைப்பட முயற்சிகள் குறித்தும் ஆர்வமுடன் நீலநிலாசெண்பகராஜனிடம் தன் அனுபவங்களை மலேசியா எழுத்தாளர் டாக்டர்.துளசி அண்ணாமலை சுவைபட பகிர்ந்து கொண்டார்.
-செய்தி  ஆக்கம்:-ச.கோபிநாத்.

செய்தி

செய்தி

சுய முன்னேற்ற நூலிற்கு  விருது

   19-2-2012 ஞாயிறு அன்று சேலம் தாரைப் புள்ளிக்காரர் அறக்கட்டளை மற்றும் எழுத்துககளம் இணைந்து மூன்றாம் ஆண்டு நூல்க்களுக்கான பரிசளிப்பு விழாவை சேலத்தில் நடத்தியது.தாரைப் புள்ளிக்காரை அறக்கட்டளை நிறுவனர் அ.குமரவேலு அவர்கள் தலைமையில் விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு நீலநிலா இதழ் நிறுவனர் கவிஞர்.நீலநிலா செண்பகராஜன் எழுதியுள்ள "வெற்றி உங்களை அழைக்கிறது" என்ற சுய முன்னேற்ற நூல் விருதுக்கு தேர்வு பெற்று தமிழறிஞர் முனைவர் சிலம்பொலி  செல்லப்பனார் அவர்கள் நூலாசிரியர் செண்பகராஜனுக்கு வழங்கினார். நீலநிலா செண்பகராஜனுக்கு வாழ்த்துக்கள்..!
-வாழ்த்துபவர் :- ஜெ.விஜயலட்சுமி,ஆசிரியர்-நீலநிலா இதழ்.,விருதுநகர்.
 

நீலநிலா மே விருதுநகர் சிறப்பிதழ் கவிதைகள்

நீலநிலா மே விருதுநகர் சிறப்பிதழ் கவிதைகள்

புதுக்கவிதைகள்

அவனது முகம் மலர
தியானமும் வேண்டாம்...
உபதேசமும் வேண்டாம்...
யாராவது கொடுங்கள்
ஒரு பிடி சோறு1
-வைகறை.

உனக்கான நிழல்
நான்தானென
எள்ளி நகையாடும்
நண்பர்களிடம்
அழுத்தமாய்ச் சொல்லுங்கள்
"நமக்கான நிழல்கள்
நாம்தானென!"
-ஏகலைவன்.

எம் தலைவனின்
பாமாலைகளையே
பூமாலைகளாய் சூடிக்கொண்டதால்
பொன்னந்தியில் பூத்த 
பூக்களெல்லாம் புலம்புகின்றன!
இப்போது நான்
பாமாலை சூட்டிக்கொள்வதா?
எம் தலைவனே..!
தகுந்ததொரு பதில் தருவாயா?
-ராதே.

செய்திகள் வாசிப்பது... 
நாளிதழ்களில் முழுப்பக்க
நகைக்கடை விளம்பரம்
முதல் பக்கத்தில்...
நகை வாங்குதா
வேண்டாமா என்ற குழப்பம்
நடுநிலையாளர் மனதில்...
யார்  திருடன்?எது திருட்டு?
எங்கு ஒரே இருட்டு..
-"கவிச்சுடர்" போஸ்.
 

Monday, April 30, 2012

நீலநிலா மே 2012 இதழ் தூளிப்பாக்கள்

நீலநிலா மே 2012 இதழ் தூளிப்பாக்கள்

கால்களில்
ஆயிரம் முத்தம்
குளக்கரை மீன்கள்.
-கலவை சண்முகம்.

இருட்டுச் சமூகத்தை
வெளிச்சப்படுத்திய கறுப்புச் சூரியன்
காமராசர்!
-பொன்.குமார்.

நதியன் குளியல் 
சாக்கடையில் குளித்த நதி
அழுக்கைப் போக்க ஓடுகிறது
கடலில் குளிக்க!
-செல்வராஜா.


கிராமத்து பெண்ணின் முகத்தில்
அளவுக்கு மீறி அப்பியிருந்தது
உலகமாயக்கலின் ஒப்பனை1
-நீலநிலா செண்பகராஜன்.

நீலநிலா விருதுநகர் சிறப்பிதழ் கவிதைகள்

நீலநிலா விருதுநகர் சிறப்பிதழ் கவிதைகள்(மே-2012 இதழ் )


பயணம் இனித்தது
எறும்பி ன் வாயில்
சர்க்கரை.
-ஆரிசன்.

அண்ணாச்சி கடையை
பொட்டலம் போட வருகிறான்
அமெரிக்கன்!
-அருணாச்சல சிவா.

நாற்றமெடுக்கின்றன
பூங்காக்கள்
முறை தவறும் காதல்!
-ச.கோபிநாத்.

சப்பரமா? சவப்பெட்டியா?
எதிர்காலம்?
மரங்கள்...
-ச.வளர்மதி.

மௌனமாகி போனது
காற்று
மரங்களின் மரணத்தால்!
-கு.தாய்சுரேஸ்.