கோரிப்பாளையம்
சமீப காலமாக "மதுரையை" கதைக்களமாக வைத்து நிறைய திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன.அப்படி ஒரு படமாக திகழ்கின்ற திரைக்காவியம் தான் "கோரிப்பாளையம்" ஆகும்.
"தூங்கா நகரத்தில் தூக்கம் தொலைத்த இளைஞர்களின் கதை" - என்ற முன்னுரையோடு இப்படம் துவங்குகிறது.வேலை இல்லாத இளைஞர்கள் வன்முறையை நாடினால் அவர்களது வாழ்வு சீரழிந்து விடும் என்பதை "செல்லூலாயிடில்" அழகாக சிற்பமாக வடித்துள்ளார் இப்படத்தின் இயக்குனர் இராசு மதுரவன் அவர்கள்.
படத்தின் திரைக்கதை விறுவிறுப்பாக கையாளப்பட்டிருந்தாலும் வசனங்களில் அதிகமாக "நாடகத்தன்மை" உள்ளமையால் பார்வையாளர்ளை சலிக்க வைக்கிறது.
மதுரை என்றாலே அரிவாளுடன் ரௌடித்தனம் செய்வார்கள் என்று இப்படத்தில் காட்டப்பட்டிருக்கும் விசயம்,கதையின் யதார்த்தத் தன்மையை சற்று மிகைப்படுத்துவதாக அமைந்துள்ளது.மேலும் வன்முறை காட்சிகளை சற்று குறைத்துருந்தால் பெண் பார்வையார்களிடையே நல்லதொரு தாக்கத்தை இத்திரைப்படம் ஏற்படுத்தியிருக்கும்.
"அழகர்" கதாபாத்திரம் பாராட்டத்தக்க நடிப்பாகும்.மற்றபடி 5 நண்பர்கள்,காமெடி,குத்துப்பாட்டு,அரிவாள் சண்டை போன்ற வழக்கமான அம்சங்களை சற்று தவிர்த்திருந்தால் "கோரிபாளையம்" மதுரை புகழ் ஜிகர்தண்டாவின் ருசியைப் பருகிய திருப்தியை அனைத்து திரை ரசிகர்களுக்கும் அளித்திருக்கும்."கோரிப்பாளையம்"- இளைஞர்களின் புதுக்கவிதை.
ஆக்கம்: நீலநிலா செண்பகராஜன், தாழம்பூ இதழ் சூலை-செப்டம்பர் 2010 இதழ்.
innum virivaaka alasungkal thozha!
ReplyDelete