Friday, November 4, 2011

நீலநிலா ஆகத்து மாத இதழ் கவிதைகள்

நீலநிலா ஆகத்து மாத இதழ் கவிதைகள்

தூளிப்பாக்கள்

விண்ணைத் தொடுகிறான் மனிதன்
போட்டி போடுகிறது
விலைவாசி..!
-இராம்.மோகன்தாஸ்.

ஆற்றாங்கரை மரம் உதிர்க்கும்
மலரைச் சூடிச் செல்கிறது
நதி!
-பூர்ணா.


நீட்டப்படும் கையைப்
பொறுத்தே அமைகிறது
பிச்சையும் லஞ்சமும்!
-இரா.பரமசிவன்.


அனைத்தும் அறிவோம் என்றார்
அறியவில்லை கேமராவை
சாமியார்!
-இரா.ரவி.


சாலை விபத்து
துக்கம் விசாரிக்க கூடின
ஈக்கள்.
-மீனாசுந்தர்.


ஜன்னல் சாத்தினேன்
ஓட்டை வழியே உள்ளே வந்தது
உளவாளி நிலவு..!
-பஸிரா ரசூல்.

(பரிசு பெற்ற தூளிப்பா)
எரிக்கும் வெயிலில் ஏக்கத்தோடு
மர நிழலை தேடியலைந்தான்
மரம்வெட்டி!
-சந்திரா பெருமாள்.

கண்ணீரை ஒளித்து வைக்கும்
காலம் கடந்த
சில ஞாபகங்கள்.
-சுகந்தம்.


காயங்களின்றி கனவுகள் காணலாம்
வலிகளின்றி வெற்றிகள் இனிக்காது...
எதிர்பார்ப்பு.
-சுபத்ரா.


எரிபொருளின்றி
எரிகின்றது
ஏழையி வயிறு.
-கலைத்தாமரை.





Wednesday, November 2, 2011

குறுங்கவிதைகள்

குறுங்கவிதைகள்

எங்கும் நிற்கிறேன்
நான்!
நிற்காமலே..!
-----------------------------------------------------
சொல்லலாம்..!
சொல்லாமாலும் இருக்கலாம்..!
சொல்லி சொல்லலாம்..!
சொல்லாமாலும் சொல்லலாம்..!
---------------------------------------------------------
நானோ என்னைத் தேடினேன்..!
நீயோ உன்னைத் தேடினாய்..!
ஊரோ நம்மைத் தேடுகிறது..!
--------------------------------------------------------------
தூங்காமல் கவிதை எழுதினேன்
விழித்திருக்கும்
அறிவுப் பசிக்குச் சோறிட்டு..!
--------------------------------------------------------------------
நீ பார்த்தாய்..!
நான் தேடினேன்..!
யார் தான் நம்மை உணர்வது..!
-------------------------------------------------------------------------
சிரித்தாள்..!
சிரித்தேன்..!
சிரித்தார்கள்..!
------------------------------------------------------------------------
எறும்புகள் மொய்க்கிறது
புன்னகைக்கும் ரோஜாப்பூக்களை..!
------------------------------------------------------------------------
 ஆக்கம்: நீலநிலா செண்பகராஜன்.

Friday, September 9, 2011

சென்ட்ரியு கவிதைகள்

சென்ட்ரியு கவிதைகள்
யாரும் திட்டுவதே இல்லை
விசில் அடிக்கும்
நடத்துனரை!

விளைநிலங்கள் 
சோறு போட்டது
"ரியல் எஸ்டேட்காரனுக்கு!"




-ஆக்கம்: நீலநிலா செண்பகராஜன்.




Wednesday, August 3, 2011

எழுத்துலகம்

எழுத்துலகம்
பல்கலைச்செல்வர்
            பள்ளிப்பருவத்திலேயே நகைச்சுவை நாடகங்களை எழுதி, இயக்கி,நடித்து அரங்கேற்றம் செய்தவர் நீலநிலா செண்பகராஜன்.கல்லூரிப் பருவத்தில் நடனப்போட்டி,பலகுரல் போட்டி,பேச்சுப் போட்டி,கவிதைப் போட்டி போன்றவற்றில் பல பரிசுகளைப் பெற்றவர்.கல்லூரிக் காலத்தில் இவர் எழுதி,இயக்கி,நடித்த "மனித நேயம்" என்ற சமூக  நாடகம், மதுரை காமராசர் பல்கலைக் கழக அளவில் நடைபெற்ற "இளைஞர் கலை விழாவில்" இரண்டாம் பரிசு வெள்ளிப் பதக்கம் பெற்றது.
               2004 முதல் "நீலநிலா" என்ற இலக்கியக் காலாண்டிதழை  நடத்தி வருகிறார். இது வரை 21 இதழ்கள் வெளிவந்துள்ளன.இதழியல் பணிகளுக்காக வல்லிக்கண்ணன்,பொன்னீலன்,லேனா தமிழ்வாணன் போன்றோரின் பாராட்டைப் பெற்றவர். "யாரோ எழுதிய கடிதம்" என்ற கவிதை நூலையும், "வெற்றி உங்களை அழைக்கிறது!" என்ற வாழ்வியல் கட்டுரை நூலையும் எழுதி வெளிட்டுள்ளார். தமிழ்நாடு  கலை இலக்கியப் பெருமன்றம் விருதுநகர் கிளைச் செயலாளராகவும் செயல்படுகிறார்.
                ஓவியர் கணேசன் மூலம் "கவியருவி" பட்டத்தையும், எழுத்தாளர் ஜெயகாந்தன் மூலம் "சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர்" என்ற விருதையும்,தமிழ்நாடு கலை இலக்கியப் பெரும்ன்றம்-திருவில்லிப்புத்தூர் கிளை மூலம் "சிறந்த எழுத்தாளர்" என்ற பாராட்டையும் பெற்றுள்ளார்.
                    "பெரியார் காமராசர் பேரவை" "மனித நேய முரசு" "சென்னை தாய் மண் இலக்கியக் கழகம்" ஆகிய அமைப்புகள் "பல்கலைச் செல்வர்" உள்ளிட்ட பல விருதுகளை இவருக்கு அளித்துள்ளன. இவரது அடுத்த கவிதை நூல் வெளிவரவுள்ளது.

நன்றி- அமுதசுரபி ஜூன் 2011 இதழ்.

Monday, May 30, 2011

நீலநிலா செண்பகராஜனுக்கு கிடைத்த பாராட்டு

நீலநிலா செண்பகராஜனுக்கு கிடைத்த பாராட்டு

நீலநிலா செண்பகராஜண் அவர்களுக்கு,
வணக்கம்.
இலக்கிய தேடலும்,தாகமும்
உங்களிடம் நிரம்பி வழிகிறது..!
வெற்றி உங்களையும் திலகமிட்டு அழைக்கிறது..!
நம்பிக்கை நிறைந்த
"திரைப்பட இய்க்குனர்" நாஞ்சில் பி.சி.அன்பழகன்.

நன்றி: நீலநிலா ஏப்ரல்-2011 இதழ்.  

நூல் விமர்சனம்

நூல் விமர்சனம்


வெற்றி உங்களை அழைக்கிறது-சுய முன்னேற்றக் கட்டுரை நூல்
            
                 இன்று பலரும் பரப்பாக ஓடுவதே வெற்றியை நோக்கித்தான்.ஆனால் தன் இலக்கை எட்டுவதற்கான் சரியான வழி தெரியாமல் தவிப்போர் அதிகம் பேர் உண்டு.அவர்களுக்கெல்லாம் ஒரு உந்து சக்தியாக, வெற்றியை எட்டுவதற்கான வழிமுறைகளை சுட்டிக் காட்டுவதாக எளிய நடையில் உரிய மேற்கோள்களுடன் அமைந்துள்ளன இந்த நூலிலுள்ள கட்டுரைகள்.
           வெற்றியை ருசிக்க நினைப்போர்க்கு அடித்தளம் அமைப்பதில் இந்த நூலும் உதவலாம்.
-கந்தகப்பூக்கள் பதிப்பக்ம்,120,குட்டியனஞ்சான் தெரு,சிவகாசி-626123. விலை-ரூ.80/- போன்-9843577110,04562-277110.

நன்றி: குமுதம் சிநேகிதி மே16-31,2011 இதழ்.

Tuesday, May 3, 2011

காதல் தூளிப்பாக்கள்

காதல் தூளிப்பாக்கள்

தூக்கம் வரவில்லை
கொசுவாய் கடித்தது
உன் நினைவுகள்..!
-"அறிமுகம்" பி.கார்த்திகா.

மீட்க தெரியாமல் நான்
அடகு போனது
உன் நினைவுகள்!
-இரா.மீனாதேவி.

Wednesday, March 2, 2011

செய்தித் திரட்டு

செய்தித் திரட்டு

தங்கக் கட்டிலில் படுத்துறங்க ஆசையா?   
               உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த கட்டிலை பிரிட்டன் வடிவமைப்பாளர் ஸ்டூவார்ட் அக்கெஸ் என்பவர் உருவாக்கியுள்ளார்.இதன் விலை, மூன்று கோடி ரூபாய் பிரிட்டன் நாட்டில் லிவர்பூல் நகரைச் சேர்ந்த வடிவமைப்பாளர் ."செஸ்நட்" என்ற மரத்தில் செய்யப்பட்ட இந்த கட்டிலுக்கு விதானம் அமைக்கப்பட்டு, திரைச்சீலைகள் தொங்க விடப்பட்டுள்ளன.திரைச்சீலைத் துணிகள் "இத்தாலியன் காட்டன்" வகையைச் சேர்ந்த தீப்பிடிக்காத துணிகளாகும்.மேலும்,இந்த கட்டிலில் சுத்தமான 24 கேரட் தங்கம்,107 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
                 கட்டிலின் தலைப்பகுதிகளில் விதானம் மற்றும் சுற்றுப் பகுதிகளில்  தங்க வேலைபாடுகள் செய்யப்பட்டுள்ளன. விலை உயர்ந்த பஞ்சுகளைக் கொண்டு படுக்கை செய்யப்பட்டுள்ளது. அரசுக்கு வண்ணம் பூசப்பட்டு, பளபளக்கும் இந்த கட்டிலின் மதிப்பு
ரூ.3 கோடியாகும்.உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த இந்த கட்டில், இயன்திரங்களைப் பயன்படுத்தாமல்,100 சதவீதம் கை வேலைப்பாடுகளில் உருவாக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாள்ர்கள் விரும்பினால்,தங்கம் தவிர,வைரக்கற்களையும் பதித்து கட்டில் செய்ய தயாராக இருப்பதாகவும், ஆனால் ,இதைவிட இன்னும் கூடுதலாக செலவு பிடிக்கும் என்றும், ஸ்டூவர்ட் கூறுகிறார்.


நன்றி:ஜனசக்தி நாளிதழ்.






Tuesday, February 8, 2011

அனுபவக் கட்டுரை

அனுபவக்கட்டுரை

மருத்துவமனையில் பிறந்த புத்தாண்டு
                     2011ஆம் ஆண்டு எனக்கு மறக்க முடியாத ஆண்டாக திகழ்ந்தது எனலாம். ஏன் எனில் 01.01.2011 பிறக்கும் நேரம் நான் அப்பாவிற்கு உடல் நலமின்மையால்  மருத்துமனையில் இருந்தேன்.
ஆக 2011 பிறக்கும் நேரம் நான் மருத்துவமனையில் தான் இருந்தேன்.
               சரியாக 12 மணியாகும் சமயம் நான் இருந்த மருத்துவமனையில் செவிலியர்கள் அனைவரும் "கேக்" வெட்டி உற்சாகமாக 2011 ஆண்டை வரவேற்று கொண்டாடினார்கள்.
                ஆனால் நானோ அப்பாவின் உடல்நலக்குறைவின் காரணமாக சோகமே உருவாகி இருந்தேன்.
                 ஆனாலும் என் தோழி ஒருவர் சரியாக 12.15 மணியளவில் என்னை தொலைபேசியில் அழைத்து புத்தாண்டு வாழ்த்து கூறியது மறக்கமுடியாத நிகழ்வாகும்.இன்னும் சொல்வதானால் என் சோகத்தை கொஞ்சம் குறைத்தது எனலாம்.
                பின்னர் எப்படியோ உறங்கினேன். 
                இப்படியாக  2011 எனக்கு பிறந்தது.
                05.01.2011 அன்று மருத்துவமனையிலிருந்து அப்பாவின் உடல் நலம் தேறி வீடு வந்து சேர்ந்தேன்.

தூளிப்பாக்கள்

தூளிப்பாக்கள்

மூன்றெழுத்தில்
ஒரு கவிதை
காதல்!
ஆக்கம் : நீலநிலா செண்பகராஜன்.
-நன்றி: எண்ணத்தின் வண்ணம் குறுஞ்செய்தி இதழ் 788.

உடல்நலக்குறைவு
சுவாசிக்காத தருணங்களாய்
வாசிக்காத நாட்கள்!
ஆக்கம் : நீலநிலா செண்பகராஜன். 

புள்ளி இல்லா
புதுமைக் கோலம்
காதல்!
ஆக்கம் : நீலநிலா செண்பகராஜன்.
நன்றி: எண்ணத்தின் வண்ணம் குறுஞ்செய்தி இதழ்769/850.

அவள் குத்துவிளக்கைத் தூண்டினாள்
பிரகாசாமாய்
எரிகிறேன்  நான்!
ஆக்கம்:நீலநிலா செண்பகராஜன்.
நன்றி: நீலநிலா இதழ் ஏப்ரல் 2011 இதழ்.


விளைநிலங்கள்
சோறு போட்டது
"ரியல் எஸ்டேட்காரனுக்கு!"
ஆக்கம்:நீலநிலா செண்பகராஜன்.
நன்றி : விருதை மலர் மே 2011 இதழ்.


49-0வை ஆர்வமுடன்
வரவேற்றனர் வாக்காளர்கள்
பணத்தைப் பெற்றுக்கொண்டு!
-ஆக்கம்:நீலநிலா செண்பகராஜன்.
-நன்றி: இனியா குறுஞ்செய்தி இதழ் 1708.

எங்கோ உருவாகி
என்னை வீழ்த்த வந்த சுனாமியாய்
என் மனைவி!

-ஆக்கம்:பா.பிரபாகர்.
-நன்றி: கொங்குசூரியன் இணைய இதழ்.

ஜனநாயகத்தை முடிவு செய்கிறது,
வாக்காளர்களுக்கு கொடுத்த
பணப்பெட்டியும்,இலவசங்களும்!
-ஆக்கம்: நீலநிலா செண்பகராஜன்.
-நன்றி: இனியா குறுஞ்செய்தி இதழ் 1833/100.

கதவைத் திற!
காற்றாய் வரட்டும்
கவிதை!
-ஆக்கம் : நீலநிலா செண்பகராஜன்.
-நன்றி:விருதை மலர் மே 2011 இதழ்.






















Monday, February 7, 2011

சுய முன்னேற்ற நூல் வெளியீட்டு விழா

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் விருதுநகர் கிளை சார்பாக எழுத்தாளர் நீலநிலா செண்பகராஜன் எழுதிய "வெற்றி உங்களை அழைக்கிறது" சுய முன்னேற்ற கட்டுரை நூல் வெளியீட்டு விழா விருதுநகரில் உள்ள முருகன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் நாடக நடிகர் வீரப்பன் வரவேற்புரை ஆற்றினார். விழாவிற்கு கலை இலக்கிய பெருமன்ற விருதுநகர் மாவட்டத் தலைவர் கந்தகப்பூக்கள் சிரிபதி தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார். நீலநிலா செண்பகராஜன் எழுதிய வெற்றி உங்களை அழைக்கிறது சுய முன்னேற்ற கட்டுரை நூலை திரைப்பட இயக்குனர் நாஞ்சில் அன்பழகன் வெளியிட எழுத்தாளர் மீனாசுந்தர் பெற்றுக் கொண்டார்.நூலை வாழ்த்தி கவிஞர் பாண்டூ,"முதற்சங்கு" இதழாசிரியர் சிவனி சதீசு ஆகியோர் பேசினார்கள்."யாரோ எழுதிய கடிதம்" கவிதை நூல் விற்பனை விவரப் பெட்டகத்தை திரைப்பட இயக்குனர் நாஞ்சில் அன்பழகன் வெளியிட நூலாசிரியர் நீலநிலா செண்பகராஜன் பெற்றுக் கொண்டார்.விழா நிகழ்ச்சிகளை கவிஞர் ராமையா தொகுத்து வழங்கினார்.நிறைவாக தொல்பொருள் ஆய்வாளர் பாலச்சந்திரன் நன்றி கூறினார்.