Monday, December 20, 2010

பத்தி

பத்தி -       குறுங்கட்டுரை -இளமைப்பருவம் -ஆக்கம்:ப.கோபிபச்சமுத்து,கிருட்டிணகிரி ஒவ்வொருமனிதனின் வாழ்விலும் இனம் புரியாத மகிழ்ச்சியைத் தரும் பருவம் இளமைப்பருவமாகும். வயதில் மூத்தவர்கள் கூட எண்ணிப் பார்க்க விழையும் ஒப்பற்றதொரு பருவமாகும் இந்த இளமைப் பருவம். பசுமையான நினைவுகள்,பரபரப்பாய் திரிந்த தருணங்கள் என இப்பருவத்தின் தாக்கமும்,ஏக்கமும் அனைவருக்கும் உண்டு. "சிக்கலான,அமைதியற்ற பருவம்" என இப்பருவம் குறித்து "உளவியல் அறிஞர் ஸ்டேன்லி ஹால்" குறிப்பிடுகிறார். குழுமனப்பான்மை,தனி நபர் வழிபாடு என காட்டாற்று வெள்ளம்மாய் சிறும் உணர்ச்சி ஊற்றும்,கோபமும்,ஆர்வமும் ஒருங்கே பெற்றுள்ள இப்பருவ்த்தைக் கவனமாக கடந்தால் சாதனைப் படிக்கட்டில் காலை ஆழப் பதிக்கலாம். பள்ளி மற்றும் கல்லூரி காலக்கட்டத்தில் கல்வி கற்றலை இனிமையாக்கினால் இப்பருவம் மகிழ்ச்சிப் பூங்காவாக காட்சியளிக்கும்.வாழ்க்கையைப் பூஞ்சோலையாக்கும் இப்பருவத்தை திறன்பட கையாண்டால் இளைஞர் உலகம் எழுச்சியுடன் மேன்மை பெறும். இப்பருவத்தை சரியாக கையாள்வார்களா நம்முடைய இளைஞர்கள்..?

No comments:

Post a Comment