Wednesday, August 3, 2011

எழுத்துலகம்

எழுத்துலகம்
பல்கலைச்செல்வர்
            பள்ளிப்பருவத்திலேயே நகைச்சுவை நாடகங்களை எழுதி, இயக்கி,நடித்து அரங்கேற்றம் செய்தவர் நீலநிலா செண்பகராஜன்.கல்லூரிப் பருவத்தில் நடனப்போட்டி,பலகுரல் போட்டி,பேச்சுப் போட்டி,கவிதைப் போட்டி போன்றவற்றில் பல பரிசுகளைப் பெற்றவர்.கல்லூரிக் காலத்தில் இவர் எழுதி,இயக்கி,நடித்த "மனித நேயம்" என்ற சமூக  நாடகம், மதுரை காமராசர் பல்கலைக் கழக அளவில் நடைபெற்ற "இளைஞர் கலை விழாவில்" இரண்டாம் பரிசு வெள்ளிப் பதக்கம் பெற்றது.
               2004 முதல் "நீலநிலா" என்ற இலக்கியக் காலாண்டிதழை  நடத்தி வருகிறார். இது வரை 21 இதழ்கள் வெளிவந்துள்ளன.இதழியல் பணிகளுக்காக வல்லிக்கண்ணன்,பொன்னீலன்,லேனா தமிழ்வாணன் போன்றோரின் பாராட்டைப் பெற்றவர். "யாரோ எழுதிய கடிதம்" என்ற கவிதை நூலையும், "வெற்றி உங்களை அழைக்கிறது!" என்ற வாழ்வியல் கட்டுரை நூலையும் எழுதி வெளிட்டுள்ளார். தமிழ்நாடு  கலை இலக்கியப் பெருமன்றம் விருதுநகர் கிளைச் செயலாளராகவும் செயல்படுகிறார்.
                ஓவியர் கணேசன் மூலம் "கவியருவி" பட்டத்தையும், எழுத்தாளர் ஜெயகாந்தன் மூலம் "சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர்" என்ற விருதையும்,தமிழ்நாடு கலை இலக்கியப் பெரும்ன்றம்-திருவில்லிப்புத்தூர் கிளை மூலம் "சிறந்த எழுத்தாளர்" என்ற பாராட்டையும் பெற்றுள்ளார்.
                    "பெரியார் காமராசர் பேரவை" "மனித நேய முரசு" "சென்னை தாய் மண் இலக்கியக் கழகம்" ஆகிய அமைப்புகள் "பல்கலைச் செல்வர்" உள்ளிட்ட பல விருதுகளை இவருக்கு அளித்துள்ளன. இவரது அடுத்த கவிதை நூல் வெளிவரவுள்ளது.

நன்றி- அமுதசுரபி ஜூன் 2011 இதழ்.