Friday, November 26, 2010

குறுஞ்செய்தி இதழ் கவிதைகள்

கரையில் ஒதுங்கியிருந்த,
சிப்பிக்களை சேகரிக்கத் தொடங்குகிறேன்,
அலையின் சீற்றமூம்,காற்றின் அழுத்தமும் அதிகரிக்கிறது,
வீசி எரியப்படுக்கிறேன்,
கை நழுவிய பையிலிருந்து
சிதறி இருந்தன சிப்பிகள்...
-அய்யாவாடி சத்யாவின் "கிறுக்கல்" இதழ்-26.11.2010.


சிறு அறையில்
தொங்கி கொண்டிருக்கிறது
காலம்..
- ஆக்கம் : முத்துசிவகுமாரன்,யாழியின் "யாழியிசை" இதழ்-26.11.2010. 

கொஞ்சம் மணல்,
கொஞ்சம் கூழாங்கற்கள்,
கொஞ்சம் கிளிஞ்சல்கள்,
சிறு மீன்கள் என திகழ்கிறது,
என் வரவேற்பறையில் இருப்பது
லிட்டர்  கொள்ளவில் ஒரு கடல்,
அடுக்குமாடி குடியிருப்பில் 
என் வீடு முதல் தளத்தில் என்பதால்,
கடல் மட்டத்திலிருந்து 
பூமியின் உயரம் சுமார் 4.88 மீட்டர்.
- ஆக்கம்: ப.தியாகு, "யாழிசை" இதழ்  01.12.2010.


உங்கள் வலது கை உணவு அருந்தும்,
ஆசிர்வதிக்கும்,
கவி எழுதும்,
கை குழுக்கும்,
வணங்கும்,வரவேர்க்கும்...
ஆனால் மலமும் அள்ளும்
எங்கள் வலது கை!
-ஆக்கம்:கண்மணி ராசா," ஜெயம் "இதழ்  322  02.12.2010. 

லாரி ஏறி
செத்தது
நதி!
- ஆக்கம்:கந்தகப்பூக்கள் சிரிபதி, "களம்" இதழ் 106 08.12.2010.                                                                                                                                                                                                                               

No comments:

Post a Comment