Wednesday, November 24, 2010

குறுஞ்செய்தி இதழ்களில் வெளியான என்னுடைய கவிதைகள்




கல்லாய் நீ..!
உளியாக நான்..!
எப்போது காதல் சிற்பமாவோம் நாம்..?
 -குறுங்கவிதை இதழ்,14.06.2009.

உலகமே போற்றும்
சிறந்த கவிதை
குழந்தையின் கிறுக்கல்.
-லிங்கம் இதழ்,14.06.2009.


கண்களை என்னிடம் செலவழித்து விட்டு
இதயத்தை
எதற்காக சேமிக்கிறாய்..?
-பரவசம் இதழ்,14.06.2009.

வண்ண வண்ண நிறங்களில்
கட்சிக்கொடிகள்
வறுமையில் மக்கள்.
-கே.கே.ஆர்.இதழ்,14.06.2009.


தொலைந்து போனது
உறவுகளின் அன்பு பரிமாற்றங்கள்
திருமண மண்டப வாசலில் சிரித்தபடி
கை கூப்பி வரவேர்க்கும்
பொம்மைகள்.
-ராகா இதழ்,14.06.2009.

வாசலில் பிச்சைக்காரனின் குரல்!
மொட்டைமாடியில் காகத்தின் சத்தம்!
பசியுடன் வீட்டிற்குள் நான்..!
-உதயம் இதழ்,20.06.2009.


விதவை வேடமிட்டே
சம்பாதிக்கிறாள்
சுமங்கலி நடிகை.
-உதயம் இதழ்,02.07.2009.


பசியில் அழும் குழந்தை!
ஆச்சிரிய்த்தின் விளிம்பில் தாய்!
பால் குடிக்கும் பிள்ளையார்!
-உதயம் இதழ்,20.07.2009.

மணல் வீடு கட்டி மகிழும் வயது!
மண்ணைச் சுமந்து வாழ்கிறது
சின்னக்குழ்ந்தை!
-உதயம் இதழ்,07.08.2009.


சீதைகளாக ஈழத்தமிழர்கள்
எந்த இராமன் வந்து 
முள்வேளி உடைப்பானோ..?
-இனியா இதழ் 292.


கழிவறை இல்லாத கிராமங்களில்
வீடு தோறும்
தொல்லைக்காட்சிப் பெட்டிகள்.
-பரவசம் இதழ்,12.09.2009.

இராக்கட் உருவானது!
ஏவுவதற்கு தயாரானார்கள்
நல்ல நேரத்தை எதிர்ப்பார்த்து! 
-உதய்ம் இதழ்,16.09.2009.


வறுமை நரகாசுரனை ஒழித்து
என்றைக்கு கொண்டாடுவது இன்ப தீபாவளி?
சிவகாசி சிறுவனின் கேள்வி!
-சுபா வார இதழ்,11.10.2009.

நெற்றி என்னும் புத்தகத்தின்
அழகிய தலைப்பு
குங்குமம்.
-பரவசம் இதழ் 205,சம்பூர்ணம் இதழ் 14.06.2010.


"கேளுங்கள் தரப்படும்" என்றார்கள்
நிறைய பிரச்சனைகள்
எதைக் கேட்பது..?
-லிங்கம் இதழ்,14.10.2009.


அதிக மனிதர்கள்
கடைப்பிடிக்கும் மதம்
தாமதம்.
-எண்ணத்தின் வண்ணம் இதழ் 342.


எழுத்துக்களை பிரசவிக்கும்
கர்ப்பிணிப் பெண்
எழுதுகோல்.
-உதயம்,26.11.2009.

இசை புரியாவிட்டாலும்
ரசிப்பாதாய் நடிக்கிறோம்!
இசையாய் வாழ்க்கை அமைந்தாலும்!
-சுந்தர் இதழ் 155.


தீக்குளித்தான் முத்துக்குமரன்
எரிந்தது
தமிழர் நெஞ்சங்கள்!
-காகம் இதழ்.


சிறைச்சாலையில் உறங்குகிறார்
ஆயுதம் தாங்கியபடி
சிறைக்காவலர்!
-உதயம் இதழ்,05.04.2010.


வெயிலில் செறுப்பின்றி நடக்கும்
ஏழைச்சிறுவன்
சுடும் என் மணம்!
-இனியா 934.


பேருந்தில் கவிதை நூலை
படிக்க மனமில்லை
ஜன்னலுக்கு வெளியே ரசிக்கும் கவிதையாய்
மழை பெய்யும் போது!  
-ஜெயம் இதழ் 14.06.2010.




No comments:

Post a Comment