Friday, November 4, 2011

நீலநிலா ஆகத்து மாத இதழ் கவிதைகள்

நீலநிலா ஆகத்து மாத இதழ் கவிதைகள்

தூளிப்பாக்கள்

விண்ணைத் தொடுகிறான் மனிதன்
போட்டி போடுகிறது
விலைவாசி..!
-இராம்.மோகன்தாஸ்.

ஆற்றாங்கரை மரம் உதிர்க்கும்
மலரைச் சூடிச் செல்கிறது
நதி!
-பூர்ணா.


நீட்டப்படும் கையைப்
பொறுத்தே அமைகிறது
பிச்சையும் லஞ்சமும்!
-இரா.பரமசிவன்.


அனைத்தும் அறிவோம் என்றார்
அறியவில்லை கேமராவை
சாமியார்!
-இரா.ரவி.


சாலை விபத்து
துக்கம் விசாரிக்க கூடின
ஈக்கள்.
-மீனாசுந்தர்.


ஜன்னல் சாத்தினேன்
ஓட்டை வழியே உள்ளே வந்தது
உளவாளி நிலவு..!
-பஸிரா ரசூல்.

(பரிசு பெற்ற தூளிப்பா)
எரிக்கும் வெயிலில் ஏக்கத்தோடு
மர நிழலை தேடியலைந்தான்
மரம்வெட்டி!
-சந்திரா பெருமாள்.

கண்ணீரை ஒளித்து வைக்கும்
காலம் கடந்த
சில ஞாபகங்கள்.
-சுகந்தம்.


காயங்களின்றி கனவுகள் காணலாம்
வலிகளின்றி வெற்றிகள் இனிக்காது...
எதிர்பார்ப்பு.
-சுபத்ரா.


எரிபொருளின்றி
எரிகின்றது
ஏழையி வயிறு.
-கலைத்தாமரை.





Wednesday, November 2, 2011

குறுங்கவிதைகள்

குறுங்கவிதைகள்

எங்கும் நிற்கிறேன்
நான்!
நிற்காமலே..!
-----------------------------------------------------
சொல்லலாம்..!
சொல்லாமாலும் இருக்கலாம்..!
சொல்லி சொல்லலாம்..!
சொல்லாமாலும் சொல்லலாம்..!
---------------------------------------------------------
நானோ என்னைத் தேடினேன்..!
நீயோ உன்னைத் தேடினாய்..!
ஊரோ நம்மைத் தேடுகிறது..!
--------------------------------------------------------------
தூங்காமல் கவிதை எழுதினேன்
விழித்திருக்கும்
அறிவுப் பசிக்குச் சோறிட்டு..!
--------------------------------------------------------------------
நீ பார்த்தாய்..!
நான் தேடினேன்..!
யார் தான் நம்மை உணர்வது..!
-------------------------------------------------------------------------
சிரித்தாள்..!
சிரித்தேன்..!
சிரித்தார்கள்..!
------------------------------------------------------------------------
எறும்புகள் மொய்க்கிறது
புன்னகைக்கும் ரோஜாப்பூக்களை..!
------------------------------------------------------------------------
 ஆக்கம்: நீலநிலா செண்பகராஜன்.